http://gwyc.ourtoolbar.com/

Jaffna Network

Jaffna Network
Jaffna Network

FaceBook FANS

Monday, July 4, 2011

கிட்னி பாதிக்கப்பட்ட எமது சகோதரருக்கு உதவி செய்வோம்

காங்கேயனோடை-13  ல்   வசித்து வரும்  19 வயது நிரம்பிய உதுமா லெப்பை முகம்மது பஸ்லான் எனும் நமது சகோதரர் தனது இரு சிறுநீரகங்களும் முற்றாக பாதிக்கப்பட நிலையில் ,விரைவில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார்.இவரது சிகிச்சைக்காக வைத்தியர்கள் நிர்ணயித்து இருக்கும் செலவு பத்து லட்சம் ரூபா(One Million) ஆகும்.
இவர் மிகவும் ஒரு வறுமைப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பதோடு,இந்த சத்திர சிகிச்சைக்கு தேவைப்படும் வைத்திய செலவான பத்து லட்சம் ரூபாவை தனது குடும்பத்தால் ஈடு செய்ய முடியாதொரு  கவலைக்கிடமான சூழ்நிலையில் ஏனைய நமது சகோதரர்களின் மேலான உதவியை நாட வேண்டிய கட்டத்தில் உள்ளார்.
இவருக்கு இவரது தந்தை தனது ஒரு சிறுநீரகத்தை வழங்க தயாராக உள்ள நிலையில் ,போதுமான பணத்தை விரைவாக திரட்டுமிடத்து இவருக்கான சிகிச்சையை செய்து இவரது உயிரை காப்பாற்ற முடியும் என இவரது வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர் .
எனவே இவருக்கான பணத்தை திரட்டுவதற்கு GREEN WAY YOUTH CLUB உம் தனது உதவிக்கரங்களை  நீட்டுவதோடு,இவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து இவரது உயிரை காப்பாற்ற உதவுமாறு தனது மதிப்பிற்குரிய வாசகர்களை வேண்டி நிற்கின்றது.
இவர் தொடர்பான ஆவணங்களும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளன.
உதவிகள் வந்து சேர வேண்டிய வங்கிக்கணக்கு இலக்கம்
MR. U.L.M. FAZLAN

111553885127

SAMPATH BANK

KATTANKUDY BRANCH 
 SRILANKA





                                                                                                      தகவல்:kattankudi.info
அஸ்ஸலாமு அலைக்கும்
காங்கேயனோடை வாழ் சகோதரர்களுக்கு!
எமதூரில் நிகழ்கின்ற பாடசாலை, பள்ளிவாயல் பற்றிய நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள், செய்திகள் புகைப்படங்கள், வாசகர்களது ஆக்கங்கள் ஆகியவற்றை எமது தளத்தில் பிரசுரிக்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது
பிரசுரிக்க வேண்டிய விடயங்களை எமது மின்அஞ்சல் முகவரிக்கு குறுகிய காலத்துக்குள் அனுப்பி வையுங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி : greenwayouth@gmail.com

Followers

Tamil Blogs Traffic Ranking

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best WordPress Themes